Pottuvil Pradeshiya Sabha
The Most Exciting village of Eastern Sri Lanka.
Pottuvil is a town in Ampara District, located on the eastern coast of the Island. It is situated 4 km north of the popular tourist destination Arugam Bay. 334 km from the city of Colombo. The Pottuvil pradeshiya sabha consists of the Pottuvil divisional secretariat division and 27 GN division. The Pradeshiya sabha was established under act No 15 of 1987.
முறைப்பாட்டை பதிவுசெய்வது எப்படி?
உங்கள் முறைப்பாட்டை நேரடியாக பொத்துவில் பிரதேச சபையில் பாரப்படுத்த முடியவில்லையா? அதனை இணையவழி அனுப்புவதற்காக இச் செயலியை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். முறைப்பாட்டு படிவத்தை உரிய தகவல்களுடன் பூரணப்படுத்தி அனுப்ப முடியும். உங்கள் முறைப்பாட்டை எமது நிறுவன தரவுத்தளத்தில் நாங்கள் ஆவணப்படுத்துகின்றோம் பிரிதொரு சந்தர்பத்தில் உங்களால் அதை காணமுடியும் அதற்கென பிரத்தியேக கடவுச்சொல் உங்களுக்கு வழங்கப்படும். பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளை பொதுப்பயன்பாட்டுக்கும் பார்வைக்கும் விடப்படும் என்பதை ஏற்றுக்கொண்ட பின்னரே உங்கள் முறைப்பாட்டை அல்லது குறைகளை பதிவேற்றவும்.
உங்கள் முறைப்பாட்டை பின்தொடர முடியுமா?
நீங்கள் பதிவுசெய்யும் முறைப்பாட்டின் தற்போதைய நிலை என்பதை நீங்கள் அறிய முடியும். நாங்கள் வழங்கும் விசேட ஞாபககுறி மூலம் கண்டறிய முடியும்.
முறைப்பாட்டினை உற்றுநோக்குவோர்.
உங்கள் முறைப்பாடு நேரடியாக பொத்துவில் பிரதேச சபையின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். அதேவேளை முறைப்பாட்டினை எவரும் காணும் வண்ணம் நாம் வடிவமைத்துள்ளோம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நேரடியாக உங்கள் முறைப்பாட்டை தீர்க்கவும் விசாரணை செய்யவும் எமது செயலி உதவும்.
பொறுப்பு துறப்பு.
இவ்விணையத்தளமானது பொத்துவில் பிரதேச சபையின் உத்தியோகபூர்வமற்றது. இதன் நிரலாக்கங்கள் பொதுமக்களின் குறைகேள் அதிகாரியாக இணைய உலகில் சஞ்சரிக்கும் நோக்கில் பொதுவான காப்புரிமையின் கீழ் வெளியிடப்படுகின்றது. இதில் காணப்படும் தரவுகள் பொதுமக்கள் மற்றும் பயனர்களால் வழங்கப்பட்டவையாகும், இதில் எமது நிறுவனத்தின் கருத்துக்கள் பிரதிபலிப்பதில்லை என்பதுடன் தரவுகளின் ஊர்ஜித தன்மை குறித்து எமது நிறுவனம் எவ்வித பொறுப்புக்களையும் ஏற்பதில்லை. தரவுகளில் குழறுபடிகள் இருப்பின் எமக்கு அறியத்தரவும் முடியும், அது குறித்து நாங்கள் கரிசனை செலுத்துவோம். இங்குள்ள முறைப்பாடுகளில் போலித்தன்மையினை விசாரணைசெய்யும் அதிகாரம் எமது நிறுவனத்திற்கு கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.